VSOP ஆடியோ மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பாஸ் என்கிற பாஸ்கரன்' வெற்றி கூட்டணியான எம்.ராஜேஷ் மற்றும் ஆர்யா மீண்டும் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க". இந்த படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் ஆடியோ மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் திங்கட்கிழமை அதாவது ஜூலை 21ஆம் தேதியும், மற்ற பாடல்கள் ஜூலை 29ஆம் தேதியும், படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதியும் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் வாசு மற்றும் சரவணன் ஆகிய நண்பர்களிடையே ஒரு பெண் குறுக்கிட்டால் ஏற்படும் விளைவுகளை காதல் மற்றும் காமெடி கலந்து எம்.ராஜேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நடித்துள்ள ஆர்யாவும் சந்தானமும் உண்மையிலேயே சிறந்த நண்பர்கள் என்பதால் திரையிலும் இவர்களது நட்பு இயல்பாக அமைந்துள்ளதாகவும், தமன்னா இந்த படத்தில் வித்தியாசமாக அதே நேரத்தில் சிறப்பாக காமெடியும் செய்திருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
மேலும் இந்த படத்தில் 'தாமிரபரணி' பானு, கருணாகரன், வித்யூலேகா ராமன், ரேணுகா, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.ராஜேஷ் படம் என்றாலே கண்டிப்பாக ஒரு பிரபல நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் என்பது வழக்கம். அதேபோல், இந்த படத்தில் விஷால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை ஆர்யா, தனது சொந்த நிறுவனமான 'தி ஷோ பீப்பிள்' நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com