வேட்புமனு தாக்கல் செய்தவுடன் விஷாலின் அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,February 04 2017]

நீதிமன்ற உத்தரவை அடுத்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விஷாலின் மன்னிப்பை ஏற்று சஸ்பெண்டை ரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். சஸ்பெண்ட் ரத்து செய்த சில நிமிடங்களில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக விஷால் அறிவித்தார். அதற்கு உலகநாயகன் கமல்ஹாசன் வழிமொழிந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்நிலையில் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டி இடுவதற்கான மனுவை சற்று முன் விஷால் தாக்கல் செய்தார் . விஷால் மனுதாக்கல் செய்தபோது, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ஆர்யா, இயக்குநர்கள் மிஷ்கின், பாண்டிராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரவின் காந்தி, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

மனுவை தாக்கல் செய்த பின்னர் வெளியே வந்த விஷால் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ஜெயித்து ஒரு ஆண்டுக்குள் வாக்குறுதி நிறைவேற்றாவிட்டால் மொத்தமாக ராஜினாமா செய்வோம்' என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

விஷால் ஏற்கெனவே, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சசிகலா முதல்வர் ஆனபின் பொறுக்கிகளை அடக்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி

ஜல்லிக்கட்டு பிரச்சனை உச்சத்தில் இருந்த போது பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழர்களை தனது சமூக வலைத்தளத்தில் 'பொறுக்கி' என்று கூறி இழிவுபடுத்தினார்.

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் தோனி மனைவிக்கு தொடர்பா?

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு ஒன்றில் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதியது உண்மையா? அதிர்ச்சி தகவல்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல சந்தேகங்களை எழுப்பிய நடிகை கவுதமி, இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

முதல்வர் பதவியை நோக்கி சசிகலா.. விட்டு கொடுக்கின்றாரா ஓபிஎஸ்?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்று சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ரூ.100 நோட்டுக்கும் ஆபத்தா? ரிசர்வ் வங்கி விளக்கம்

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.