'எனிமி' நண்பனுக்கு என்னுடைய நன்றி: ஆர்யா டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்து வரும் ’எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அரிமா நம்பி’ ’இருமுகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’எனிமி’ படத்தில் விஷால் நாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் மிருணாளினி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆர்யா நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ’நல்ல படத்தை கொடுத்த எனது நண்பன் ’எனிமி’ விஷாலுக்கு நன்றி. இந்த படத்தின் படப்பிடிப்பு எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. எங்களை நம்பிய எங்கள் தயாரிப்பாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இப்போது தமன் அவர்களின் இசைக்காக காத்திருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
அதேபோல் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இதுகுறித்து கூறியபோது ’ஆர்யாவின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டன. ஒவ்வொரு நொடியும் அவர் நடிப்பதை ரசித்தேன். இப்போது ஊரடங்கு என்பதால் வேகமாக வீட்டுக்கு செல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Thanks to my Nanben #enemy @VishalKOfficial darling for a great film ???????? Had the best time shooting ????Big hug to our producer @vinod_offl bro for trusting us. @anandshank bro and @RDRajasekar sir team work is just ?????? now waiting for @MusicThaman darling ??@MiniStudio_ pic.twitter.com/EdOqM2tdV4
— Arya (@arya_offl) April 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments