'மார்க் ஆண்டனி' டீம் உடன் இணையும் ஆர்யா.. பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்..!

  • IndiaGlitz, [Wednesday,August 07 2024]

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடித்த ‘மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

’மார்க் ஆண்டனி’ உட்பட சில வெற்றி திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வினோத்குமாரின் அடுத்த படத்தின் பூஜை இன்று நடந்தது. இந்த படத்தின் நாயகனாக நடிகர் ஆர்யா நடிக்கவிருக்கும் நிலையில் இது குறித்து தகவல்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தை ஜியென் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவான ’ரன் பேபி ரன்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் திரைக்கதையை ’லூசிபர்’ ’எம்புரான்’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதிய முரளி கோபி எழுத உள்ளார். தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்தது. பூஜை குறித்த புகைப்படங்களை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் படக்குழுவினர்களுக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.