நீங்க வேற லெவல் மாப்பிள்ளை: பிரபல நடிகருக்கு வாழ்த்து கூறிய மாமியார்!

  • IndiaGlitz, [Monday,March 29 2021]

பிரபல தமிழ் நடிகர் ஒருவரை அவரது மாமியார் ’நீங்கள் வேற லெவல்’ என்று தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

பிரபல தமிழ் நடிகர்களில் ஒருவர் ஆர்யா. இவரது நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சார்பேட்டா’. இந்த படத்தின் கேரக்டர் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் தெரிந்ததே. இதில் ஆர்யா கபிலன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் நடிகர் கலையரசன் வெற்றிச்செல்வன் என்ற கேரக்டரிலும் ரங்கன் வாத்தியார் கேரக்டரில் பசுபதியும் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆர்யாவின் ’சார்பேட்டா’ படத்தின் போஸ்டர்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவற்றில் ஒன்றினை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஆர்யாவின் மாமியாரும் அவரது மனைவி சாயிஷாவின் தாயாருமான சாஹீன் பானு மருமகனுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டுவிட்டில், ‘அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் உச்சம்தான் நீங்கள் என்றும், நீங்கள் எங்களை பெருமைப்பட வைத்துவிட்டீர்கள் என்றும், வேற லெவலுக்கு சென்றுள்ளீர்கள்’ என்றும் புகழ்ந்துள்ளார். இந்த டுவிட்டுக்கு பதில் அளித்த ஆர்யா ’நன்றி அம்மா’ என்று பதில் கூறி உள்ளார்.