விஜய் படத்தின் டீசரை வெளியிடுகிறார் ஆர்யா

  • IndiaGlitz, [Friday,January 22 2016]

இளையதளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாடலாசிரியர் விஜய் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'நையப்புடை'. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது. இந்த டீசரை பிரபல நடிகர் ஆர்யா இணையதளத்தில் வெளியிடவுள்ளார்.


எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த விஜய்விக்ரம் இயக்கி வரும் இந்த படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். அதே போல் பா.விஜய் இந்த படத்தில் பத்திரிகையாளராக நடித்துள்ளார்.

முன்னாள் ராணுவ அதிகாரியான எஸ்.ஏ.சந்திரசேகரும், பத்திரிகையாளரான பா.விஜய்யும் இணைந்து சமூகத்தில் உள்ள தீயவர்களை அழிக்க செய்யும் போராட்டமே படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ்.தாணு ரஜினியின் கபாலி' மற்றும் விஜய்யின் 'தெறி' ஆகிய படங்களையும் தயாரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விரைவில் ரிலீஸ் ஆகிறது ஜி.வி.பிரகாஷின் முதல்படம்

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிகராக அறிமுகமான படம் 'பென்சில்'. ஆனால் இந்த படத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட 'டார்லிங்'...

பிப்ரவரியில் முடிகிறது தனுஷின் அடுத்த படம்

தனுஷ் நடித்த 'தங்கமகன்' திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானதை அடுத்து அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'கொடி'...

விஜய்யின் 'தெறி' டீசர் வெளியாகும் தேதி

இயக்குனர் அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ள 'தெறி'...

அஜித்தின் அதிரடி ஓய்வு முடிவு

'வேதாளம்' படத்தை முடித்தவுடன் முழங்கால் மற்றும் தோள்பட்டையில் சர்ஜரி செய்து கொண்ட தல அஜித்...

'தெறி' படத்தில் எமிஜாக்சன் கேரக்டர் குறித்த புதிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில்...