ரஜினி ரசிகரை அஜீத் ரசிகராக மாற்றினாரா விஷ்ணுவர்தன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள 'யட்சன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. ஆர்யா, கிருஷ்ணா, தீபா சந்நிதி, ஸ்வாதி ரெட்டி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்தை யூடிவி நிறுவனத்தினர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் ஆர்யா, 'தல அஜீத்தின் வெறித்தனமான ரசிகராக நடித்துள்ளார். அஜீத் படம் வெளியாகும் தினத்தில் அவருடைய கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் ஆர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி அஜீத்தின் ரசிகர்களும் இந்த படத்தினை ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையில். இந்த படத்தின் கதையை எழுதிய எழுத்தாளர்கள் சுபா, ஆர்யாவின் கேரக்டரை ரஜினி ரசிகனாகத்தான் எழுதியிருந்தனர். இது இந்த கதையை வாரந்தோறும் ஒரு பிரபல இதழில் வெளிவந்தபோது படித்த அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் அஜீத் ரசிகராக இருப்பதால், அவருடைய ரசிகர்களை கவர்வதற்காகவும், படத்தின் புரமோஷனுக்காகவும் ரஜினி ரசிகர் கேரக்டரை அஜீத் ரசிகர் கேரக்டராக விஷ்ணுவர்தன் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆர்யாவும், விஷ்ணுவர்தனும் அஜீத்தின் மிக தீவிரமான ரசிகர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments