ஆர்யாவின் ஆணழகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. விரைவில் சூப்பர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,June 30 2024]

ஆர்யா நடித்து வந்த ’மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இந்த படத்தில் ஆணழகன் கேரக்டரில் ஆர்யா நடித்து வரும் நிலையில் அவர் வொர்க்-அவுட் செய்து நிஜ ஆணழகன் போலவே மாறினார். அவரது டெடிகேஷனை பார்த்து படக்குழுவினர்களே ஆச்சரியம் அடைந்தனர். ’சார்பாட்டா பரம்பரை’ படம் போலவே இந்த படமும் ஆர்யாவின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்யா, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனைகா, ரைசா வில்சன், அதுல்யா ரவி உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தை மனு ஆனந்த இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இன்னும் சில நாட்களில் தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்றும் விரைவில் இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

கவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? மீண்டும் ஒரு வெற்றி படமா?

கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

எனது பயோபிக் படத்தின் ஹீரோ, தயாரிப்பாளர் இரண்டும் அவர் தான்: நடராஜன் தகவல்..!

கிரிக்கெட் வீரர்களின் பயோபிக் திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பாக தோனி, டெண்டுல்கர் ஆகியோர்களின் பயோபிக் திரைப்படங்கள்

மூன்றாவது நாளிலும் செஞ்சுரி அடித்த 'கல்கி 2898 ஏடி'.. மொத்த வசூல் எவ்வளவு?

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் நடிப்பில் உருவான 'கல்கி 2898 ஏடி'திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான நிலையில் இந்த படம்

விஜயாவுக்கு ஆப்பு வைத்த மனோஜ்..! 'சிறகடிக்க ஆசை' 2 மணி நேர எபிசோடில் இவ்வளவு நடந்துருக்கா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் தினந்தோறும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று இரண்டு மணி நேரம் எபிசோடு

பிரே பண்ணினேன் கடவுளுக்கு கேட்கல, கம்ப்ளைன்ட் பண்ணினேன் போலீஸ் கண்டுக்கல்ல.. 'மழை பிடிக்காத மனிதன்' டிரைலர்..!

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல்