ஆர்யாவின் அடுத்த படம் குறித்த ரிலீஸ் தகவல்
- IndiaGlitz, [Tuesday,July 23 2019]
நடிகர் ஆர்யா, சூர்யாவுடன் நடித்த 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் அவருடைய இன்னொரு படத்தின் ரிலீஸ் குறித்த தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.
ஆர்யா நடிப்பில் 'மெளனகுரு' இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'மகாமுனி'. இந்த படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் ஆகியவை முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில், சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் ஆர்யா தற்போது தனது மனைவி சாயிஷாவுடன் 'டெடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் முடியும்தருவாயில் உள்ளது.