ஆர்யாவின் 'மகாமுனி' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Wednesday,September 04 2019]

ஆர்யா நடித்த ’மகாமுனி’ திரைப்படம் வரும் 6ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 157 நிமிடங்கள் அதாவது இரண்டு மணிநேரம் 37 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்சார் பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டதால் இந்த படம் வரும் 6ம் தேதி வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது

More News

பாலிவுட் படத்திற்காக விஜய் பட வாய்ப்பை தவிர்த்த பிரபல நடிகை!

விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 64' திரைப்படத்திற்காக முதலில் நாயகியாக பரிசீலனை செய்யப்பட்டவர் ராஷ்மிகா மந்தனா என்பது தெரிந்ததே. அதன் பின்னர் அவரிடம் மீண்டும் படக்குழுவினர் அணுகியபோது

பழிவாங்க காத்திருக்கும் சாக்சி: கவின் நிலைமை என்ன?

பிக் பாஸ் வீட்டில் வனிதா என்ற ஒரு வைல்ட் கார்டு எண்ட்ரியையே சக போட்டியாளர்களால் சமாளிக்க முடியாத நிலையில் தற்போது சாக்ஸி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகிய மூன்று விருந்தினர்கள் புதிதாக வந்துள்ளனர்

கவின் செய்தால் தவறு, ஷெரின் செய்தால் சரியா?

இந்தவார நாமினேஷனில் சேரன் மட்டும் ஷெரின் ஆகிய இருவரை கவின் நாமினேட் செய்தார். ஷெரினுக்கு இந்த போட்டியில் வெல்ல அனைத்து தகுதிகளும் உள்ளது

'தல 61' திரைப்படம் மீண்டும் ரீமேக்கா?

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் 'பிங்க்' படத்தின் ரீமேக் என்பதும் அந்தப் படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

வாட்ஸ் அப் உதவியால் 6 மாவட்டங்களை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்: 

ராநாதபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் அவருக்கு புற்று நோய் தாக்கத்தால் முதுகுத்தண்டும் செயல் இழந்துவிட்டதால் எட்டு மணி நேரத்தில் புதுவையில்