close
Choose your channels

ஆர்யாவின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி!

Thursday, August 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு 'கஜினிகாந்த்' என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே வெளிவந்த நிலையில் இந்த ஆண்டு அவர் ஐந்து படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அவற்றில் முக்கியமான படம் சூர்யா உடன் ஆர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ஆர்யா நடித்த இன்னொரு திரைப்படமான 'மகாமுனி' திரைப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் ஜிவி பிரகாஷின் 'சிவப்பு மஞ்சள் பச்சை' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார், காளி வெங்கட், ஜெயபிரகாஷ், அருள்தாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாந்தகுமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அருள்நிதி நடித்த 'மெளனகுரு' என்ற திகில் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் ஆர்யாவுக்கு திருப்புமுனையை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment