கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா?

  • IndiaGlitz, [Saturday,September 19 2015]

நடிகர் ஆர்யா நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான 'மீகாமன்', 'புறம்போக்கு', 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க', 'யட்சன்' ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சூப்பர் ஹிட் ஆகவில்லை. இதற்கு காரணம் இந்த படங்கள் அனைத்திலுமே ஆர்யா இரண்டு கதாநாயகர்களில் ஒருவராகவே நடித்து வந்துள்ளார் என்றும் இதை தவிர்க்க அவர் இனிமேல் அடுத்து வரும் படங்களில் தனி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றும் அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆலோசனைக்கு ஏற்ப சோலோ ஹீரோ படம் ஒன்றில் அவர் விரைவில் ஒப்பந்தமாகவுள்ளதாக கூறப்படுகிறது. 'கோ', 'அயன்', 'அனேகன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கே.வி.ஆனந்த் ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு 'மாற்றான்', 'அனேகன்' ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததாகவும், ஆனால் தற்போது ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கே.வி.ஆனந்த்-ஆர்யா இணையும் இந்த படம் ஆர்யாவின் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்யா நடித்து வரும் 'இஞ்சி இடுப்பழகி' மற்றும் 'பெங்களூர் டேய்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளதால் இந்த இரண்டு படங்களும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்க்கு டிரைவர் ஆனாரா 'நான் கடவுள்' ராஜேந்திரன்?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.....

இந்திய அளவில் முதல் இடத்தை நோக்கி செல்லும் 'புலி'

விஜய் நடித்த 'புலி' திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.....

வித்யூலேகாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜீத்?

ஏற்கனவே ''வீரம்'' படத்தில் அஜீத்துடன் நடித்திருந்த நகைச்சுவை நடிகை வித்யூலேகா ராமன், சமீபத்தில் ''தல 56'' படத்திலும் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம். இந்நிலையில் அஜீத், வித்யூலேகா படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது......

'நானும் ரெளடிதான்' சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடித்த 'மாயா' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் பாராட்டை பெற்றுள்ளது.

முதல்முறையாக இணைந்த ரஜினி-அஜீத்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த விநாயகர் சதூர்த்தி தினத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.....