அடல்ட் காமெடி பட இயக்குனரின் முதல் 'யூ' படம்

  • IndiaGlitz, [Thursday,May 31 2018]

'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு 'ஏ' சான்றிதழ் அடல்ட் காமெடி படங்களை இயக்கி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார். இவருக்கு பல்வேறு வகையான விமர்சனங்கள் கிடைத்தபோதிலும் இரண்டு படங்களும் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று தயாரிப்பாளரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

இந்த நிலையில் இரண்டு அடல்ட் காமெடி படத்திற்கு பின்னர் ஆர்யா, சாயிஷா நடித்த 'கஜினிகாந்த்' என்ற படத்தை சந்தோஷ் ஜெயகுமார் இயக்கி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சனும் முடிந்து சென்சாருக்கு சென்றது.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே அடல்ட் காமெடி படம் மட்டுமின்றி தன்னால் 'யூ' படமும் இயக்க முடியும் என்பதை நிரூபித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ்

ஆர்யா, சாயிஷா, கருணாகரன், சதீஷ், காளி வெங்கட், ராஜேந்திரன், சம்பத் ராஜ், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பாலமுராளி பாலு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் மிக விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய நடிகை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகம் அடுத்த மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ளது

தமிழ்நாடு சுடுகாடாகும்: பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் ஆவேசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் அதன்பின்னர் பேட்டியளித்தார்.

'காலா'வுக்கு எதிராக போராட்டம்: டெபாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ் மிரட்டல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன்  7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு கர்நாடக மாநில திரைப்பட வர்த்தக சங்கம் தடை விதித்துள்ளது.

இந்திய அளவில் ட்ரெண்டாகி வரும் #நான்தான்பாரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி 'சொல்வதெல்லாம் உண்மை' இந்த நிகழ்ச்சியை கலாய்த்து