காதல் மனைவி சாயிஷாவுக்கு உருகி உருகி பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஆர்யா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் வெளியான அடுத்த நாளே ஆர்யாவுக்கு மகள் பிறந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் நண்பர்கள் இன்று அதிகாலையில் இருந்தே சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது காதல் மனைவி சாயிஷாவுக்கு நடிகர் ஆர்யா தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை சற்றுமுன்னர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ’நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உங்களை போன்ற ஒரு அன்பான துணையை என் வாழ்க்கையில் நான் பெற்றதில் அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் சாயிஷா உடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Happy birthday my wifey ?????????? May the special love you have for me keep increasing everyday ???? You are the most loving person and I m very lucky to have you in my life ??????@sayyeshaa pic.twitter.com/KbbyHT3tz9
— Arya (@arya_offl) August 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments