காதல் மனைவி சாயிஷாவுக்கு உருகி உருகி பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஆர்யா!

  • IndiaGlitz, [Thursday,August 12 2021]

பிரபல நடிகர் ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் வெளியான அடுத்த நாளே ஆர்யாவுக்கு மகள் பிறந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் நண்பர்கள் இன்று அதிகாலையில் இருந்தே சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது காதல் மனைவி சாயிஷாவுக்கு நடிகர் ஆர்யா தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை சற்றுமுன்னர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ’நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உங்களை போன்ற ஒரு அன்பான துணையை என் வாழ்க்கையில் நான் பெற்றதில் அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சாயிஷா உடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

மகளின் தோழிக்கு பாலியல் கொடுமை...! அதிமுக பிரமுகர் கைது.....!

தன்னுடைய மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஜினி, விஜய், கமல்ஹாசனை அடுத்து மேலும் ஒரு மாஸ் நடிகருக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அகில இந்திய நடிகராக மாறிவிட்டார் என்றும் அதுமட்டுமின்றி சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் சரி,

பார்த்திபன் இயக்கத்தில் அபிஷேக்பச்சன்: படப்பிடிப்பு ஆரம்பம்!

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து, தயாரித்து, இயக்கிய திரைப்படம் 'ஒத்த செருப்பு' என்பதும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது

நீலகிரியில் ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு? யானை உயிரிழப்பால் மருத்துவர்கள் அதிர்ச்சி!

நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பகம் அருகே உள்ள மசினகுடி பகுதியில் நேற்றுமுன்தினம் 4 வயதுள்ள ஆண் யானை ஒன்று ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளது.

சிறுத்தை சிவாவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஜினிகாந்த்: வைரல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது