close
Choose your channels

மே 4-ல் ரிலீஸ் ஆகும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஆர்யா

Friday, April 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மே 4-ல் ரிலீஸ் ஆகும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஆர்யா

கடந்த ஆண்டு வெளியான 'கடம்பன்' படத்தை அடுத்து நடிகர் ஆர்யாவுக்கு வேறு படங்கள் வெளிவரவில்லை. அவர் நடிப்பதாக இருந்த 'சங்கமித்ரா' திரைப்படமும் எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்ற தகவலும் இதுவரை இல்லை. ஆர்யா தற்போது 'கஜினிகாந்த்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆர்யா ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்றும், அந்த படம் வரும் மே 4ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்றும் தகவல் வெளிவந்துள்ளது. அந்த படம் தான் கவுதம் கார்த்திக் நடித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து'.

இந்த படத்தில் ஆர்யா, கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த பிரஸ்மீட்டில் பேசிய நாயகி யாஷிகா, 'இந்த படம் வெற்றி பெற்றால் தமிழ் சினிமா வேற லெவலுக்கு செல்லும்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment