ஆர்யாவை மீண்டும் துன்புறுத்த விரும்பவில்லை. பாலா

  • IndiaGlitz, [Tuesday,August 18 2015]

பிரபல இயக்குனர் பாலாவுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு தேசிய விருது வாங்கிக் கொடுத்த திரைப்படம் 'நான் கடவுள்'. ஆர்யா, பூஜா மற்றும் பலர் நடித்திருந்த இந்த படம் அகோரிகளின் வாழ்க்கை முறைகளை கொண்டது. இந்த படத்தில் அகோரியாக நடித்த ஆர்யா நீண்ட முடியும், தாடியும் வளர்த்து, கடுமையாக உழைத்ததாகவும், அவரை மிக அதிகமாக பாலா வேலை வாங்கியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த இயக்குனர் பாலாவிடம் 'நான் கடவுள்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாலா,
"நான் கடவுள்' படத்திற்காக ஆர்யாவை நான் அதிகம் துன்புறுத்திவிட்டேன். மீண்டும் அவரை துன்புறுத்த விரும்பவில்லை' என்று கூறினார். இதிலிருந்து பாலாவுக்கு 'நான் கடவுள்' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியா இல்லை என தெரிய வந்துள்ளது.

பாலா தற்போது "தாரை தப்பட்டை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இளையராஜாவின் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

More News

பாங்காக் வெடிகுண்டு சம்பவம். நூலிழையில் உயிர் பிழைத்த பிரபல நடிகை

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நேற்று இரவு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் உடல் சிதறி 27 பேர் பலியான செய்தி அனைவரையும் உலுக்கியுள்ள நிலையில்...

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பஞ்ச் வசனங்கள். ஒரு பார்வை

தமிழ் திரையுலகில் பக்கம் பக்கமாக வசனம் பேசி வந்த கதாநாயகர்களை சுருக்கமாக அதே நேரத்தில் நறுக்கான வசனம் பேச வைத்த பெருமை மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களை போய் சேரும்....

'புலி' படத்தின் அமெரிக்க விநியோக உரிமை ரூ.2 கோடியா?

இளையதளபதி விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்பட பலர் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி...

ரஜினி, கமலை அடுத்து விஜய்யிடம் ஆதரவு கேட்ட விஷால் அணி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாகிவிட்டது...

கபாலி டைட்டில் அறிவித்த சிலமணி நேரங்களில் எழுந்த டிரண்டும், பிரச்சனையும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் படத்தின் டைட்டிலை நேற்று இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் அதிகாரபூர்வமாக 'கபாலி' என்று அறிவித்தார் ...