'பத்து தல' படத்தில் செம ஆட்டம் போட்ட சாயிஷா.. கணவர் ஆர்யாவின் கமெண்ட் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த ’பத்து தல’ என்ற திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் நேற்று இந்த படத்தில் இடம் பெற்ற சிங்கிள் பாடல் வெளியானது.
நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா செம நடனமாடி இருக்கும் இந்த பாடலின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ’புஷ்பா’ படத்தில் கிளாமராக நடனமாடிய சமந்தாவையே சாயிஷா ஓரம் கட்டி விட்டார் என கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்னரும் கிளாமர் ஆடிய சாயிஷாக்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் இந்த பாடலுக்கு சாயிஷாவின் கணவர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் கமெண்ட் பதிவு செய்துள்ளார். அதில் ’இந்த பாடலை பார்த்த பிறகு உங்களை பெரிய திரையில் பார்ப்பதற்கு காத்திருக்கிறேன், நீங்கள் எப்போதுமே பெஸ்ட், என்றும் இது வெறும் தொடக்கம் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆர்யாவின் இந்த கமெண்ட் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் சாயிஷா தொடர்ந்து படங்களில் நடனமாடுவார் அல்லது நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Can't wait to see you on big screen 🔥🔥🔥😍😍😍you are the best love 😘😘🤗This is just the beginning 😉👍 https://t.co/tDZt94y8kE
— Arya (@arya_offl) March 25, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout