ஜெர்மனி பெண்ணை ஏமாற்றிய புகார்....! ஆர்யா நேரில் ஆஜராகி விளக்கம்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பண மோசடி செய்த வழக்கில் ஆர்யா இன்று போலீசில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
இலங்கையை சொந்த ஊராகக்கொண்ட வித்ஜா என்ற பெண், ஜெர்மெனியில் குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வருகிறார். அங்கு சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் இவரிடம் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நெருங்கிப் பழகியுள்ளார். இதன்முலம் ஆன்லைன் வழியாக ஆர்யா பணம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சென்ற 2019-இல் ஆர்யா, நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ந்துபோன வித்ஜா, ஆன்லைன் மூலமாக சிபிசிஐடியில் பணமோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் ஆர்யா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பினர். இந்தநிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு நேரில் ஆஜராகினர் ஆர்யா. 2 மணி நேரமாக நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கும், தன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கமளித்த ஆர்யா, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் புறப்பட்டு சென்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com