ஆர்யாவின் 'இஞ்சி இடுப்பழகி'யில் கமல்-ரேவதி?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்யா, அனுஷ்கா நடித்த 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்த வாரம் இன்னுமொரு டீசரை வெளியிட உள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
'இஞ்சி இடுப்பழகி' டைட்டிலை கேட்டவுடனே கண்டிப்பாக அனைவருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன், ரேவதி நடித்த 'தேவர் மகன்' படத்தின் பாடல் ஞாபகம் வரும். எனவே இந்த படத்தை பார்க்க வரும் ஆடியன்ஸ்களை குஷிப்படுத்த தேவர் மகன்' படத்தில் இடம்பெற்ற அதே பாடலின் ஒருசில வரிகளை பயன்படுத்தவும், அந்த படத்தில் வருவது போன்ற காட்சிகள் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
ஆர்யாவும் அனுஷ்காவும், கமல்-ரேவதி போன்று தங்களை நினைத்துக்கொண்டு கனவு காணும் காட்சிக்காக அதே காஸ்ட்யூம், அதே பெட்ரூம் பாணியில் ஒரு காட்சி தயாராகி வருவதாகவும், இந்த காட்சிகள் அடுத்த வாரம் வெளியாகும் டீசரில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த பாடல் காட்சிக்காக இசைஞானி இளையராஜாவிடம் முறைப்படி அனுமதி பெறவுள்ளதாகவும், செய்திகள் வெளிவந்துள்ளது.
அனுஷ்கா இந்த படத்தின் கேரக்டருக்காக 15 கிலோ உடல் எடையை அதிகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபரில் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தில் ஆர்யா, அனுஷ்கா, சோனல் செளஹான், ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 'பாகுபலி' படத்திற்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி இசையமைப்பில் உருவாகியுள்ல இந்த படத்தை பிவிபி நிறுவனம் தயாரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com