close
Choose your channels

ஆர்யா-அனுஷ்காவின் 'இஞ்சி இடுப்பழகி'. ஒரு முன்னோட்டம்

Wednesday, November 25, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யாவின் சமீபத்திய படங்களான 'புறம்போக்கு', வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, யட்சன் ஆகிய படங்கள் சுமாராக ஓடிய நிலையில் அவர் பெரிதும் நம்பியிருக்கும் படம் தான் 'இஞ்சி இடுப்பழகி'

அதே நேரத்தில் 'பாகுபலி', ருத்ரம்மாதேவி என வெற்றிப் படங்களை கொடுத்த அனுஷ்காவுக்கு இந்த படம் ஹாட்ரிக் வெற்றி படமாக இருக்குமா? என்ற கேள்விக்கு விடையளிக்க உள்ள படம் 'இஞ்சி இடுப்பழகி'

இந்த படத்திற்காக அனுஷ்கா எந்த படத்திற்கும் இல்லாத வகையில் 20கிலோ உடல் எடையை அதிகரித்து நடித்துள்ளார். முன்னணி இடத்தில் இருக்கும் நடிகைகள் யாரும் எடுக்க விரும்பாத ரிஸ்க்கை இந்த படத்திற்காக அனுஷ்கா எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இரண்டாம் உலகம்' படத்திற்கு பின்னர் ஆர்யா-அனுஷ்கா, அதே தயாரிப்பாளரான பிவிபி நிறுவன தயாரிப்பில் நடிக்கும் படம்

இந்த படத்தின் மிக முக்கிய அம்சம் கிட்டத்தட்ட தென்னிந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதுதான்.

நடிகைகளில் ஹன்சிகா, காஜல் அகர்வால், லட்சுமி மஞ்சு, ஸ்ரீதிவ்யா, தமன்னா, ஆகியோர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

நடிகர்களில் நாகார்ஜூனா, ஜீவா, பாபிசிம்ஹா, ராணா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளனர்.

சீனியர் நடிகை ரேவதி இந்த படத்தில் அழகுக்கலை நிபுணராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.


'பாகுபலி' படத்தில் பிரமாண்டமாக இசையமைத்த எம்.எம்.கீரவானி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது படத்திற்கு கிடைத்த ஒரு பலம்.

பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் பிரகாஷ்ராஜ், ஊர்வசி, பிரம்மானந்தம், சோனல் செளஹான் ஆகியோர் நடித்துள்ளனர்.

நாளை மறுநாள் அதாவது நவம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள இந்த படம் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ததா? என்பதை 27ஆம் தேதி பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment