close
Choose your channels

ஆர்யாவின் 'இஞ்சி இடுப்பழகி' சென்சார் தேதி?

Saturday, September 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த வருடத்தில் மட்டும் ஆர்யா நடித்த 'புறம்போக்கு', 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க' மற்றும் 'யட்சன்' ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீசாகியுள்ளது. இதுபோல 'ரோமியோ ஜூலியட்' மற்றும் 'இன்று நேற்று நாளை' ஆகிய இரண்டு படங்களில் ஆர்யா கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ஆர்யாவின் அடுத்த திரைப்படமான 'இஞ்சி இடுப்பழகி' விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

குண்டான உடல் தோற்றத்துடன் இருக்கும் அனுஷ்காவின் உடல் எடையை குறைக்க வைக்கும் பயிற்சியாளராக ஆர்யா இந்த படத்தில் நடித்துள்ளார். ஆர்யா, அனுஷ்கா, சோனால் செளஹான், ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பிவிபி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தை பிரகாஷ் இயக்கியுள்ளார். 'பாகுபலி' படத்திற்கு இசையமைத்த எம்.எம்.கீரவானியின் இசையில், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தணிக்கை வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்றும், இம்மாத இறுதியில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் விஜய்யின் 'புலி' வெளியாவதால், இந்த படம் அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment