காதல் மனைவியிடம் கிஃப்ட் கேட்ட முன்னணி நடிகர்? வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரீலில் நடித்து ரியல் ஜோடியாக மாறிய ஆர்யா-சாயிஷா தற்போது நட்சத்திரத் தம்பதிகளாக உலா வருகின்றனர். தமிழில் “வனமகன்” படத்தில் அறிமுகமான சாயிஷா அடுத்து கார்த்தியுடன் “கடைகுட்டி சிங்கம்” சூர்யாவுடன் “காப்பான்“ நடிகர் விஜய் சேதுபதியுடன் “ஜுங்கா“ போன்ற படங்களில் நடித்தார். பின்பு “கஜினிகாந்த்“ படத்திற்காக நடிகர் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த இவர் தற்போது ரியல் ஜோடியாகவும் மாறி இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை ஒட்டி தனது காதல் மனைவி சாயிஷாவிற்கு நெற்றியில் முத்தம் கொடுத்து அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார் நடிகர் ஆர்யா. அந்தப் புகைப்படத்தின் கேப்ஷனாக ஒரு காதல் தத்துவத்தை பொழிந்த நடிகர் ஆர்யா கடைசியில் சாயிஷாவிடம் கிஃப்ட் எங்கே எனக் கேட்டு இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதைவிட பெரிய கிஃப்ட் வேணுமா எனக் கிண்டல் அடித்து வருகின்றனர்.
மேலும் நடிகர் ஆர்யா, தான் வெளியிட்டு உள்ள அந்த பதிவில் “முடிவில்லா காதலை என் வாழ்நாள் முழுவதும் உனக்கு அளிப்பேன். என் அன்பே“ என்றொரு காதல் கவிதையையும் பொழிந்து இருக்கிறார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு லைக்குகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com