சாயிஷா 2 வயதாக இருந்தபோது வாங்கிய கிஃப்ட்.. மகளின் 2வது பிறந்தநாள் பரிசாக கொடுத்த ஆச்சரியம்..!

  • IndiaGlitz, [Tuesday,July 25 2023]

நடிகை சாயிஷா இரண்டு வயதாக இருந்தபோது அவரது அம்மா வாங்கிய பிறந்தநாள் கிப்ட் தற்போது சாயிஷாவின் மகளின் இரண்டாவது பிறந்தநாளில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

நடிகர் ஆர்யா - சாயிஷா நட்சத்திர தம்பதிகளின் மகள் அர்யானா இரண்டாவது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இது குறித்த வீடியோவை சாயிஷா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் அவர் இரண்டு என்ற எண்ணில் வடிவமைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தியை எடுத்து காண்பித்த சாயிஷா, இந்த மெழுகுவர்த்தி தனது இரண்டாவது பிறந்த நாளின் போது தனது தாயார் வாங்கியது என்றும் அதை பத்திரமாக 24 ஆண்டுகள் பாதுகாத்து தற்போது தனது மகளின் பிறந்தநாளில் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தனது மகளின் பிறந்தநாள் வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

கவுண்டமணி - யோகிபாபு இணைந்து நடிக்கும் படம்.. ஒரே படத்தில் ஒட்டுமொத்த நகைச்சுவை கூட்டம்..!

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் ஒரு திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் யோகி பாபு உட்பட தமிழ் சினிமாவின்

இவருக்கா மயோசிட்டிஸ் ..? வேற லெவலில் பேலன்ஸ் செய்யும் சமந்தா..!

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் சென்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான சிகிச்சை செய்வதற்கு சில மாதங்கள் திரையுலகில் இருந்து ஓய்வு பெற்றதாகவும் கூறப்பட்டது.

'மாவீரன்' 11 நாள் வசூல் இத்தனை கோடியா? இன்னும் ஒரு சில நாட்களில் ரூ.100 கோடி?

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான 'மாவீரன்' திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகள் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றன.

'விடுதலை 2' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி இந்த பிரபல நடிகையா? வெற்றிமாறனின் தரமான சம்பவம்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'விடுதலை' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது

வைர வியாபாரி மகளுக்கே வைரம் பரிசா? தமன்னாவுக்கு கிஃப்ட் கொடுத்த நடிகரின் மனைவி..!

நடிகை தமன்னா மகாராஷ்டிராவை சேர்ந்த வைர வியாபாரி ஒருவரின் மகள் என்பதும்  அவர் நடிக்க வரும் போதே கோடீஸ்வரர் என்றும் கூறப்படுவது உண்டு. இந்த நிலையில் உலகில் ஐந்தாவது மிகப்பெரிய