ஆர்யா-சாயிஷா தம்பதியின் க்யூட்டான குழந்தை.. அழகிய புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஆர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ஆர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள அவருடைய மனைவி சாயிஷா, குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஆர்யா தற்போது ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை தெரிந்தே.
இந்த நிலையில் இன்று நடிகர் ஆர்யா தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா தனது சமூக வலைத்தளத்தில் ஆர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்து பதிவில், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே! நீங்கள் எப்போதும் சிறந்த கணவர், தந்தை மற்றும் நல்ல மனிதராக இருக்கிறீர்கள். நீங்கள் எங்கள் வாழ்வில் இருப்பதற்காக நாங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம். என்னுடையவராக இருப்பதற்கு எனது நன்றி. நான் உங்களை என்றென்றும் நேசிப்பேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த பதிவில் அவர் ஆர்யா மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். முதன்முதலாக சாயிஷா தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த குழந்தையின் க்யூட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Happy Birthday my love! You are the best husband, father and human being ever! We are so blessed to have you in our lives! Thank you for being mine. I love you forever and beyond! ❤️❤️ @arya_offl
— Sayyeshaa (@sayyeshaa) December 11, 2022
Meet our baby girl Ariana! ?? pic.twitter.com/JSLmJy7QmY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com