ஆர்யா-சாயிஷாவுக்கு இன்று ஸ்பெஷல் தினம்: ரசிகர்கள் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான ஆர்யா-சாயிஷா தம்பதிகளுக்கு இன்று விசேஷமான தினத்தை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா, நடிகை சாயிஷாவை கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மார்ச் 10ஆம் தேதி ஆர்யா-சாயிஷா தம்பதிகள் தங்களது மூன்றாவது திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து ஆர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘மூன்றாவது திருமண நாளுக்கு வாழ்த்துக்கள்! இந்த உலகில் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பார்ட்னருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை மிகவும் அன்புடனும் ஆதரவுடனும் காதலுடனும் அவர் பார்த்து கொள்கிறார்’ என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது .
இந்த நிலையில் ஆர்யா தற்போது நலன் குமாரசாமி இயக்கிவரும் ஒரு திரைப்படத்திலும் சக்தி செளந்திரராஜன் இயக்கும் ‘கேப்டன்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy anniversary to the man I love, cherish, respect and adore forever! Thank you for being mine…the best husband and daddy on the planet! Holding on to you till eternity! ❤️❤️❤️???????????????? @aryaoffl pic.twitter.com/BIDyDCDibi
— Sayyeshaa (@sayyeshaa) March 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments