ஆர்யா-சாயிஷாவுக்கு இன்று ஸ்பெஷல் தினம்: ரசிகர்கள் வாழ்த்து!

  • IndiaGlitz, [Thursday,March 10 2022]

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான ஆர்யா-சாயிஷா தம்பதிகளுக்கு இன்று விசேஷமான தினத்தை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா, நடிகை சாயிஷாவை கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மார்ச் 10ஆம் தேதி ஆர்யா-சாயிஷா தம்பதிகள் தங்களது மூன்றாவது திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து ஆர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘மூன்றாவது திருமண நாளுக்கு வாழ்த்துக்கள்! இந்த உலகில் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பார்ட்னருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை மிகவும் அன்புடனும் ஆதரவுடனும் காதலுடனும் அவர் பார்த்து கொள்கிறார்’ என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது .

இந்த நிலையில் ஆர்யா தற்போது நலன் குமாரசாமி இயக்கிவரும் ஒரு திரைப்படத்திலும் சக்தி செளந்திரராஜன் இயக்கும் ‘கேப்டன்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எதிர்ப்பையும் மீறி கடலூரில் ரிலீஸ் ஆன 'எதற்கும் துணிந்தவன்': ரசிகர்கள் மகிழ்ச்சி!

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை கடலூர் மாவட்டத்தில் வெளியிடக்கூடாது என பாமக சார்பில் எதிர்ப்பு

பிரபல ஹீரோவுடன் 'அரபிக்குத்து' பாடலுக்கு ஆட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா: வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' பாடலுக்கு பிரபல ஹீரோவுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா செம ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

யாருமே சரியா விளையாடலை: விமர்சித்த ரம்யா பாண்டியனை புரட்டி எடுத்த அனிதா-தாமரை

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது சூடுபிடித்துள்ளதாக தெரிகிறது 

ஓய்வுக்கு இதுதான் காரணம்… வைரலாகும் ஸ்ரீசாந்தின் உருக்கமான பதிவு!

இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று குறைந்த நாட்களில் பிரபலமானவர் கேரள வீரர் ஸ்ரீசாந்த்.

காதலியை கரம்பிடித்த 22 வயது இளம் இந்திய வீரர்… ரசிகர்கள் வாழ்த்து!

இந்தியக் கிரிக்கெட் அணியில் லெக் ஸ்பின் பந்துவீச்சாளராக இருந்துவரும் ராகுல் சாஹர் தனது நீண்டநாள் காதலி இஷானியை கரம்பிடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.