ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்: காரணம் இதுதான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா தம்பதிக்கு நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்யா கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆர்யா தற்போது ஒரு பொறுப்புள்ள தந்தையாக மாறிவிட்டார் என்றும், ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் விஷால் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை ரசிகர்களுக்கு தெரிவிப்பதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், தான் தற்போது மாமாவாகிவிட்டதில் மிகவும் மகிழ்ச்சி என்றும் விஷால் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தி இரட்டை மகிழ்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
So Happy to break this news,great to be an Uncle,my Bro Jammy & Sayyeshaa r blessed wit a #BabyGirl,uncontrollable emotions rite now in midst of shoot.Always wish de best 4 dem,Inshallah,GB de new Born,my Baby Girl @sayyeshaa & @arya_offl for taking a new responsibility as a Dad
— Vishal (@VishalKOfficial) July 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments