ஆர்யா-சக்தி செளந்திரராஜன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

  • IndiaGlitz, [Sunday,April 03 2022]

ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ’டெடி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் இதே கூட்டணி இணைந்துள்ள திரைப்படம் ’கேப்டன்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல் வெளியானது. ஆர்யாவுடன், சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, , காவ்யா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் என்பது மதன் கார்க்கி பாடல்களில், யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

More News

இயக்குனராக அறிமுகமாகும் ரஜினி பட நடிகர்: படப்பிடிப்பு இன்று ஆரம்பம்!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார் என்பதும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது

'ஆர்.ஆர்'ஆர். இரண்டாம் பாகம் உண்டா? விஜயேந்திர பிரசாத் பேட்டி!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அறிந்ததே.

யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட 'அனந்தம்' இணைய தொடர் டீசர்!

தமிழ் திரையுலகின் மதிப்புமிகு இயக்குநரான மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  பிரியா V இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட இனிமையான தொடர் “அனந்தம்”

பிக்பாஸையே புலம்ப வைத்த சிம்பு: வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் பிக்பாஸ், சிம்புவின் கேள்விகளால் புலம்பிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

'பீஸ்ட்' டிரைலர்: திருப்பூர் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' டிரைலர் நேற்று வெளியான நிலையில் இந்த டிரைலர் குறித்த எச்சரிக்கையை திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.