50 வருஷமா இந்த இடத்துக்கு போன யாருமே திரும்பி வரல்ல: ஆர்யாவின் 'கேப்டன்' டிரைலர்

  • IndiaGlitz, [Monday,August 22 2022]

நடிகர் ஆர்யா நடித்த ‘கேப்டன்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான ‘டெடி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மீண்டும் இந்த கூட்டணி ‘கேப்டன் ‘மூலம் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்து உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான இந்தப் படத்தின் ட்ரைலரில் அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளன என்பதும் ஆர்யா இந்த படத்தில் ராணுவ கேப்டனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கண்ணுக்கு தெரியாத ஒரு வேற்று கிரகத்து மிருகம் ஒன்றினால் ராணுவத்தினருக்கு ஏற்படும் பிரச்சனை, அதை ஆர்யாவின் டீம் எப்படி சமாளிக்கின்றது என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று டிரைலரில் இருந்து ஊகிக்கப்படுகிறது.

இந்த படத்தின் டிரெய்லரில் உள்ள பல காட்சிகள் ஹாலிவுட்டில் அர்னால்டு நடித்த ’பிரிடேட்டர்’ படத்தை ஞாபகப் படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆர்யா ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இந்த படம் நிச்சயம் அதிரடி ஆக்ஷன் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.