அவன் அடிக்கிற ஒவ்வொரு அடிக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்: ஆர்யாவின் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' டீசர்..!

  • IndiaGlitz, [Friday,March 31 2023]

ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த டீசரில் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளதை அடுத்து, இந்த படம் ஆக்சன் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசர் தொடக்கத்தில் ‘ இந்த உலகத்துல எந்த திசையில் தப்பு நடந்தாலும் அந்த தப்பை தட்டிக் கேட்க ஒருத்தன் சிங்கம் போல வருவான், அவன் அடிக்கிற ஒவ்வொரு அடிக்கும் ஒரு அர்த்தமும் இருக்கும், ஒரு அலப்பறையும் இருக்கும், அவனை யாரும் தொடணும்னு நினைச்சா..? என்ற மாஸ் வசனம் இடம் பெற்றுள்ளது.

அதேபோல் இந்த டீசரை முடிவில் ஆர்யா பேசும் ’அடிக்கிறது எனக்கு ஒரு பெரிய விஷயம் இல்ல, வித்தையும் இல்ல, போற போக்குல எச்சத்துப்பிற மாதிரி துப்பி தூக்கி எறிஞ்சுட்டு போயிட்டே இருப்பேன்’ என்ற ஆக்ரோஷமான வசனம் டீசரின் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது .

ஆர்யா ஜோடியாக சித்தி இதானி நடித்திருக்கும் இந்த படத்தில் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, நரேன், மதுசூதன ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். முத்தையா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் வெங்கட்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.