ஆர்யாவின் அடுத்த படம்.. செம டைட்டிலை வெளியிட்ட படக்குழுவினர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்தப் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
‘விருமன்’ வெற்றிக்கு முத்தையாவும், ’கேப்டன்’ வெற்றிக்கு பின் ஆர்யாவும் இணையும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோவில்பட்டி அருகே நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
அந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது . இந்த படத்திற்கு ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் போஸ்டரில் ஆர்யா அட்டகாசமாக இருக்கும் காட்சி உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். மேலும் இந்த போஸ்டரில் ஆர்யாவுக்கு பின்னணியில் பாட்ஷாவில் ரஜினி போஸ்டர் உள்ளதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜிவி பிரகாஷ்குமார் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Here's the Title and First Look of my next. Hope u all like it ??
— Arya (@arya_offl) December 10, 2022
#KatherBashaEndraMuthuramalingam #KEMthemovie@dir_muthaiya @SiddhiIdnani @gvprakash @VelrajR @zeestudiossouth @DrumsticksProd @venkatraj11989 @veeramani_art @ActionAnlarasu @ertviji @teamaimpr pic.twitter.com/V33QcEluns
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com