ரஜினி, விஜய் தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஆர்யா-ஜீவா

  • IndiaGlitz, [Sunday,July 02 2017]

தளபதி விஜய் நடித்த 'கத்தி', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' உள்பட பல படங்களின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் ஆர்யா மற்றும் ஜீவா இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜீவாவின் 'சிவா மனசுல சக்தி' படத்தில் ஆர்யாவும், ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் ஜீவாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் இருவரும் சமமான கேரக்டரில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த 'நான்', 'எமன்' உள்பட ஒருசில படங்களை தயாரித்துள்ள இயக்குனர் ஜீவாசங்கர் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.

More News

'தானா சேர்ந்த கூட்டம்' பர்ஸ்ட்லுக் எப்போது?

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டீசர் ஆகியவற்றை எதிர்பார்த்து சூர்யாவின் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இந்த வாரம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

நெல்லையில் இருந்து டெல்லிக்கு செல்லும் சியானின் 'ஆறுச்சாமி'

சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கிய 'சாமி' திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன நிலையில் 14 வருடங்கள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்திற்கான லொகேஷன் தேடும் பணி நடந்து வருகிறது...

தளபதியின் மெர்சல்: வியக்க வைக்கும் வியாபாரம்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டது...

திரையரங்க வேலைநிறுத்தத்திற்கு எதிராக அதிரடி முடிவு எடுத்த தயாரிப்பாளர் சங்கம்

ஜிஎஸ்டி என்னும் புதிய வரிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திங்கள் முதல் தமிழகம் முழுவதும் திரையரங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

ஜிஎஸ்டி வரியால் எது குறையும்? எது உயரும்?

இன்று முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி என்னும் புதிய வரி நடைமுறைக்கு வந்துள்ளதால் பல பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.