ரஞ்சித் சார், நான் ரெடி: ஆர்யா வெளியிட்ட அசத்தலான வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஆர்யா நடிக்க உள்ள பாக்ஸிங் படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் பாக்ஸிங் கேரக்டருக்கு ஏற்ற வகையில் ஆர்யா தனது உடம்பை ஏற்றி வருவதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து ஆர்யா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தனது அடுத்த படமான பாக்ஸிங் குறித்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்க இருப்பதாகவும் இது தனக்கு ஒரு மிகவும் சவாலான ஒரு படம் என்றும் மிக அருமையான அனுபவங்கள் இந்த படத்தில் கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்
மேலும் உடற்பயிற்சி மற்றும் பாக்ஸிங் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த வீடியோவின் இறுதியில் ‘ரஞ்சித் சார் நான் ரெடி’ என்று ஆர்யா கூறும் காட்சிகளும் உள்ளன. பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தை கே9 ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளது
My love for sports coming alive on screen
— Arya (@arya_offl) February 20, 2020
All set to face the boxers in the ring with @beemji sir for our next ?? It’s the most challenging film of my career. Loving the experience. #Ranjith sir is just phenomenal ?????? @Music_Santhosh @K9Studioz #AnbuArivu #Murali pic.twitter.com/1ejKMipNYh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments