வாக்குக்கு விருதில்லை, வருகைக்கு தான் விருது: அரவிந்தசாமி

  • IndiaGlitz, [Saturday,June 03 2017]

இன்றைய காலகட்டத்தில் பல தனியார் தொலைக்காட்சிகள், இணையதளங்கள், அமைப்புகள் ஆகியவை பல்வேறு விருதுகளை வழங்கும் விழாக்களை நடத்தி வருகின்றன. இந்த விருதுகள் வாசகர்களின் வாக்குகளை அடிப்படையாக வைத்து வழங்குவதாக கூறப்பட்டாலும் இதில் அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன

இந்த நிலையில் இதுமாதிரியான விருதுகள் குறித்து பிரபல நடிகர் அரவிந்தசாமி தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதில், '''சில விருதுகள் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவதில்லை. யார் அந்த விருது விழாவுக்கு வருகை தருகின்றார்களோ, அவர்களே விருதை பெற தகுதியானவர்களாக உள்ளனர். இதனால் விருதுக்கு என் பெயர் பரிந்துரைக்கப்பட்டாலும், நான் வாக்குகளுக்காக என் நேரத்தை செலவழிக்க விரும்பவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை அரவிந்தசாமி எந்த விருதை குறிப்பிட்டு சொல்கிறார் என்பது குறித்து அவர் கூறவில்லை என்றாலும் பலரும் பல விருதுகளின் பெயர்களை அவருடைய சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.