அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,August 13 2022]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அரவிந்த் சாமியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கிய ’தளபதி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ’ரோஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்த அரவிந்த்சாமி பல வெற்றி படங்களை தந்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள 5 படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அதில் ஒரு படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரவிந்த்சாமி நடிப்பில் ஃபெல்லினி என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெண்டகம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் செப்டம்பர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகிய நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கௌதம் சங்கர் ஒளிப்பதிவில், அப்பு என். பட்டதாரி படத்தொகுப்பில் அருள்ராஜ் கென்னடி இசையில் உருவாகிய இந்த படம் அரவிந்த்சாமியின் வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நெப்போட்டிஸம் குறித்த கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த அதிதிஷங்கர்!

சினிமா துறையில் நெப்போட்டிஸம் அதிகமாகி வருவது குறித்த கேள்விக்கு பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நெத்தியடி பதில் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நம்பர் ஒன் இடத்தை பெற்ற அமலாபால்: மகிழ்ச்சியில் பதிவு செய்த டுவிட்!

அமலாபால் நடித்து தயாரித்த 'கேடவர்' என்ற திரைப்படம் நம்பர் ஒன் இடத்தை பெற்றதையடுத்து அவர் மகிழ்ச்சியில் பதிவு செய்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது. 

சூர்யா- கார்த்தி படத்தை இயக்காததற்கு இதுதான் காரணம்: லோகேஷ் கனகராஜ்

சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த ஐடியா தனக்கு வந்ததாகவும் இதுகுறித்து தயாரிப்பாளரிடம் ஆலோசனை செய்ததாகவும் ஆனால் அது நடைபெறாமல் போனதற்கான

நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம்: ரஜினிகாந்த் சுதந்திர தின வாழ்த்து

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக பிரதமர் மோடியின் கோரிக்கையின்படி

அமெரிக்க இசை நிகழ்ச்சியில் 'பொன்னி நதி' பாடல்: ஏ.ஆர்.ரஹ்மானின் அசத்தல் வீடியோ

 பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.