அரவிந்த் சாமியை கொல்ல இத்தனை பேரா? 'வணங்காமுடி' டீசர்

  • IndiaGlitz, [Tuesday,August 03 2021]

அரவிந்த் சாமி நடிப்பில் உருவான ’வணங்காமுடி’ என்ற திரைப்படம் நீண்ட காலமாக ரிலீசாகாமல் இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் விரைவில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசரில் ஹீரோ அரவிந்த் சாமியை கொலை செய்வதற்காக போலீஸார் உள்பட பலர் முயற்சித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து அரவிந்த்சாமி எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் வணங்காமுடியின் கதையை படத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்த்சாமி, ரித்திகா சிங், சிம்ரன், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை செல்வா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அரவிந்த்சாமி நடித்த ’புதையல்’ என்ற படம் உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டி இமான் இசையில், கோகுல் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மேஜிக் பாக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தாலி ஏன் கட்டல ரசிகர் கேள்வி....! தக்க பதில் கூறிய 'குக் வித் கோமாளி' பிரபலம்....!

அண்மையில் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த குக் வித் கோமாளி கனி, ரசிகர்களிடம் உரையாடுவது மட்டுமில்லாமல், அவர்கள்  கேட்ட கேள்விக்கு பதில் கூறினார்

தந்தை பெயரை மகனுக்கு வைத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு தனது தந்தையின் பெயரையே வைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

ராஜராஜ சோழன் குறித்து பா ரஞ்சித் பேசிய வழக்கு: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பா ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கில் இன்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 

'காதல்' இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு விஜய்சேதுபதி செய்த உதவி!

பரத், சந்தியா நடித்த 'காதல்' தமன்னா நடித்த 'கல்லூரி' மற்றும் 'வழக்கு எண் 18/9' உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல்

தமிழ் உள்பட 3 மொழிகளில் தயாராகும் சூப்பர்ஹிட் மலையாள திரைப்படம்: தமிழில் இயக்குனர் இவரா?

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' திரைப்படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு விட்டது என்பது தெரிந்ததே