close
Choose your channels

நல்லவேளை கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை.. 2 படங்களை மிஸ் செய்த தகவல் கூறிய அரவிந்த்சாமி..!

Sunday, September 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார்ஜ் ரஜினிகாந்த் அவர்களுடன் ’தளபதி’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அரவிந்த்சாமி, உலகநாயகன் கமல்ஹாசனுடன் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் சில காரணங்களால் அந்த படங்களில் நடிக்க முடியவில்லை என்றும் அரவிந்த்சாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த ’மெய்யழகன்’ திரைப்படம் சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக அரவிந்த்சாமி பல பேட்டிகள் கொடுத்துள்ளார்.

அதில், ஒரு பேட்டியில் அரவிந்த்சாமியிடம், ‘ரஜினி அவர்களுடன் நடித்துள்ளீர்கள், கமல்ஹாசனுடன் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, கமல்ஹாசனுடன் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஒன்று ’அன்பே சிவம்’ மற்றும் இன்னொன்று ’தெனாலி’ என்றும் கூறினார். ஆனால் ’தெனாலி’ படத்தில் நான் நடிக்காதது நல்லவேளை என்றும், ஏனெனில் அந்த படத்தில் ஜெயராம் மிகவும் அருமையாக நடித்திருந்தார். அவர் தான் அந்த கேரக்டருக்கு பொருத்தமானவர் என்றும் கூறியுள்ளார்.

அரவிந்த்சாமியின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், ’அன்பே சிவம்’ மற்றும் ’தெனாலி’ படங்களில் அரவிந்த்சாமி நடித்திருந்தால், வேறு லெவலில் இருந்திருக்கும் என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment