மகனின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய அரவிந்தசாமி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 90களில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரும் 'தனி ஒருவன்' படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகர்களில் ஒருவராக இருக்கும் அரவிந்தசாமி, நடிகராக மட்டுமின்றி சமூக அக்கறையிலும் ஆர்வம் கொண்டவர் என்பது அவரது சமூக வலைத்தள பக்கங்களை தொடர்பவர்களுக்கு தெரியும்
இந்த நிலையில் அரவிந்தசாமியின் மகன் ருத்ராசாமி தற்போது ஐபி புரோக்ராம் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'எனது மகன் ஐபி புரோக்ராம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றது பெருமைக்குரிய ஒன்றாக கருதுகிறேன். மற்றவர்கள் அடைந்த மைல்கல்லை நீயும் அடைய உன்னை நான் வாழ்த்துகிறேன். உன்னுடைய வாழ்க்கை மகிழ்ச்சி, அன்பு மற்றும் சமாதான நோக்கத்துடன் செல்ல விரும்புகிறேன். உன்னை சுற்றியுள்ள உலகத்தார்களுக்கு பயனுள்ள வகையில் நீ செயல்பட வேண்டும். உன்னுடைய பெரிய கனவுகள் நனவாக எனது வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.
அரவிந்தசாமியின் இந்த டுவீட்டை அடுத்து அவருடைய மகனுக்கு பல டுவிட்டர் பயனாளிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்., அரவிந்தசாமியின் மகன் ருத்ராசாமி வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய நாமும் வாழ்த்துவோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout