மம்முட்டி-நயன்தாராவுக்கு கிடைத்தது அரவிந்தசாமி-அமலாபாலுக்கு கிடைக்காதது ஏன்?

  • IndiaGlitz, [Wednesday,December 20 2017]

அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கிய 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வரும் பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படம் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படம் மலையாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள படத்தையும் இயக்குனர் சித்திக் தான் இயக்கினார். ஆனால் மலையாளத்தில் இந்த படம் 'யூ' சான்றிதழ் பெற்ற நிலையில் தமிழுக்கு மட்டும் 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. மலையாளத்திற்கு கிடைத்த யூ சான்றிதழ் தமிழுக்கு ஏன் கிடைக்கவில்லை என்பது படம் பார்த்தால் மட்டுமே புரியும் என்று கருதப்படுகிறது.

அரவிந்த்சாமி, அமலாபால், நாசர், சூரி, ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர்ராகவ், பேபி நைனிகா மற்றும் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி ஆகியோர் நடித்துள்ளனர். அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவும், கெளரிசங்கர் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

 

More News

மகிழ்ச்சி. மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி' அருவி இயக்குனர் கூறியது ஏன் தெரியுமா?

கடந்த வாரம் வெளியான ;'அருவி' திரைப்படம் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்று படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஓகி புயலால் திசைமாறிய 30 குமரி மீனவர்கள் கரை சேர்ந்த அதிசயம்

சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் செய்து வருகின்றனர்.

தத்தெடுத்த கிராமத்திற்கு சென்று பொதுமக்களை உற்சாகப்படுத்திய சச்சின் தெண்டுல்கர்

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் திட்டங்களில் ஒன்றாகிய எம்.பி.க்கள் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ், முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர்,

பிட்காயினில் முதலீடு செய்தவர்களுக்கு நோட்டீஸ்: வருமான வரித்துறை அதிரடி

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தி ஆகிவருவது பிட்காயின். இந்தியாவை பொறுத்தவரையில் பொருளாதார அறிவு பெற்றவர்கள் கூட பிட்காயின் குறித்து தெரியாத நிலை

த்ரிஷா வழங்கும் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விருந்து

கோலிவுட் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான த்ரிஷா, தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக பிசியாக ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று த்ரில் படமான 'மோகினி