சித்தார்த்தை அடுத்து ஹாலிவுட் படத்தில் அரவிந்தசாமி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான 'தி லயன் கிங்' படத்தின் தமிழ் டப்பிங் படத்தில் சிம்பா என்ற சிங்கத்திற்கு சித்தார்த் குரல் கொடுத்ததாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இதே படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரான ஸ்கார் என்ற கேரக்டருக்கு நடிகர் அரவிந்தசாமி பின்னணி குரல் கொடுத்துள்ளார். இந்த தகவலை அரவிந்தசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
மேலும் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான இதே 'தி லயன் கிங்' படத்திற்கும் அரவிந்தசாமிதான் தமிழ் டப்பிங் செய்தார் என்பதும், அப்போது 'சிம்பா' கேரக்டருக்கு அரவிந்தசாமி பின்னணி குரல் கொடுத்த நிலையில் தற்போது 'ஸ்கார்' கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட முக்கிய இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இந்த படம் வரும் ஜூலை 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Last time it was Simba, this time we chose Scar.. had a lot of fun doing it. Hope u guys like it pic.twitter.com/t9NoRcUcM5
— arvind swami (@thearvindswami) June 28, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com