கார்த்திக் நரேனின் 'நரகாசுரனில் சூப்பர் ஹிட் ஹீரோ?

  • IndiaGlitz, [Saturday,January 28 2017]

'துருவங்கள் 16' படத்தின் மூலம் தான் ஒரு திறமையான இயக்குனர் என்று நிரூபித்த 22 வயது இளைஞர் கார்த்திக் நரேன், நேற்று தனது இரண்டாவது படத்தின் டைட்டில் 'நரகாசுரன்' என்பதை வெளியிட்டார் என்பதை பார்த்தோம்

முதல் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றி காரணமாக இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் கார்த்திக் நரேன் தனது இரண்டாவது படம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் சில முக்கிய விஷயங்களை கூறியுள்ளார்.

'நரகாசுரன்' படத்தில் கமர்ஷியலுகாக தான் எந்தவித சமரசமும் செய்யப்போவதில்லை என்றும் முழுக்க முழுக்க கதை சொல்லும் விதம் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இப்போதைக்கு 'டைட்டில்' தவிர இந்த படம் சம்பந்தமாக வேறு எதையும் தான் கூற விரும்பவில்லை என்று கூறிய கார்த்திக், இந்த படத்தின் நாயகன் கேரக்டருக்கு அரவிந்தசாமியை தவிர வேறு யாரையும் தன்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என்றும் இந்த படத்திற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் கூறினார்.