மாலத்தீவில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படப்பிடிப்பு

  • IndiaGlitz, [Tuesday,August 22 2017]

மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக் படமான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் அரவிந்தசாமி, அமலாபால் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்டத்தில் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் பாடல் காட்சி ஒன்றில் படப்பிடிப்பிற்காக 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படக்குழு வரும் 27ஆம் தேதி மாலத்தீவு செல்லவுள்ளனர். மாலத்தீவின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
அரவிந்தசாமி, அமலாபால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் மற்றும் தெறி' பேபி நைனிகா நடிக்கும் இந்த படத்தில் நிகிஷா பட்டேல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
அம்ரேஷ் இசையில் விஜய் உலகநாதன் ஒளிப்பதிவில், கெளரிசங்கர் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சித்திக் இயக்கி வருகிறார். மாலத்தீவு பாடல் காட்சியுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதால் வெகுவிரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

More News

ஹேப்பி பர்த்டே சென்னை: இன்று சென்னையின் 378வது பிறந்த நாள்

இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும், தமிழகத்தின் தலைநகருமான சென்னைக்கு இன்று 378 வயது ஆகிறது.

நீட் அவசர சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

நீட் தேர்வில் இருந்து இந்த ஒரு ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளதை அடுத்து தமிழக மாணவர்களின் கனவு தகர்ந்துள்ளது.

தினகரன் அணியில் மேலும் 10 எம்.எல்.ஏக்கள்: ஆட்சி தப்பிக்குமா?

அதிமுகவின் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் நேற்று இணைந்ததால் அதிருப்தி அடைந்த தினகரன் அணியின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று தெரிவித்தனர்

விவேகத்தை விட அஜித் பெரிசு: 'மெர்சல்' சர்ச்சைக்கு பார்த்திபன் பதில்

எந்த ஒரு திரைப்படத்தின் விழாக்களிலும் நடிகர், இயக்குனர் பார்த்திபன் கலந்து கொண்டு அவரது கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடுவார்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து: திடீர் அறிவிப்பு ஏன்?

கடந்த சில நாட்களாகவே ஜிஎஸ்டி உள்பட பல்வேறு காரணங்களுக்காக படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதும், திரையரங்குகள் மூடப்படுவதுமான நிகழ்வுகள் இருந்து வருகிறது.