ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அரவிந்தசாமி!

  • IndiaGlitz, [Friday,October 04 2019]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ’தலைவி’ என்ற டைட்டிலில் இயக்குனர் விஜய் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார் என்பதும் அவர் இந்த படத்தின் மேக்கப் டெஸ்ட்டுக்காக சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்று சென்று திரும்பி இருந்தார் என்பதும் தெரிந்ததே

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம் என்றாலே அதில் எம்ஜிஆர் கேரக்டர் இல்லாமல் இருக்க முடியாது. அந்த வகையில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிக்கும் நடிகர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் ஏற்பட்டது. தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி எம்ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து 28 ஹிட் படங்களில் நடித்துள்ளனர். அதுமட்டுமன்றி ஜெயலலிதாவின் அரசியல் குருவாகவும் எம்ஜிஆர் இருந்துள்ளார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் அதிமுக தலைமை ஏற்ற ஜெயலலிதா அவருடைய கொள்கைகளை பின்பற்றி வந்தார் என்பதும் தெரிந்தது

அந்த வகையில் எம்ஜிஆர் கேரக்டருக்கு பொருத்தமான நடிகரை தேர்வு செய்ய பல நடிகர்களை பரிசீலனை செய்த இயக்குனர் விஜய், தற்போது அரவிந்த்சாமியை தேர்வு செய்துள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது