ஹாலிவுட் இயக்குனருடன் அரவிந்தசாமி ஒப்பிட்ட இளம் இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,May 31 2018]

கோலிவுட்டின் இளம் இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் நரேன் இயக்கிய முதல்படமான 'துருவங்கள் பதினாறு' மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவர் இயக்கிய இரண்டாவது படமான 'நரகாசுரன்' படத்தின் நாயகனாக அரவிந்தசாமி நடித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அரவிந்தசாமி இளம் இயக்குனர் கார்த்திக் நரேனை ஹாலிவுட் இயக்குனர் நைட் ஷையமாலனுடன் ஒப்பிட்டார். இருவரது திரைக்கதையும் கதை சொல்லும் விதமும் பலவிதங்களில் ஒத்துவருவதாக அவர் தெரிவித்தார். நைட் ஷையமாலன் அவர்கள் 'தி சிக்ஸ்த் சென்ஸ்', 'அன்பிரெக்கபிள் மற்றும் 'ஸ்பிலிட்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் கார்த்திக் நரேன் 'நரகாசுரன்' படம் குறித்து இயக்குனர் கெளதம் மேனன் மீது எழுப்பிய குற்றச்சாட்டால் கோலிவுட்டில் பரபரப்பானது என்பது தெரிந்ததே. இருப்பினும் இந்த படத்தின் பிரச்சனைகள் முடிந்து விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்தசாமி, ஸ்ரேயா சந்தீப் கிஷான், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரான் ஏதான் யோஹான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் மூன்றாவது படமான 'நாடகமேடை' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

More News

ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம் திடீர் முற்றுகை: பெரும் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தூத்துகுடிக்கு சென்று அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் போராட்டம் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

'யார் நீங்க' என்று ரஜினியை கேட்டது ஏன்? தூத்துகுடி வாலிபர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபோது சந்தோஷ் என்ற இளைஞர் ரஜினியை பார்த்து 'யார் நீங்க' என்று கேள்வி கேட்டது

போராடிதான் ஒவ்வொரு உரிமையையும் பெற முடியும்: ரஜினி இயக்குனர் ரஞ்சித் பேட்டி

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று நேற்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில்

டுவிட்டரில் ரஜினியை கிண்டலடித்தாரா சித்தார்த்?

தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்த ரஜினிகாந்த் பின்னர் பேட்டியளித்த போது, 'தூத்துகுடியில் சமூக  விரோதிகள் ஊடுருவியதே போராட்டம் கலவரமாக மாற காரணம்

ரஜினிக்காக குரல் கொடுத்த விஷால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் தடை விதித்துள்ளது.