அரவிந்தசாமியின் அடுத்த பட இயக்குனர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 03 2018]

'தனி ஒருவன்' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீஎண்ட்ரி ஆன அரவிந்தசாமி தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் பிசியாக உள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம், நரேன் கார்த்திகேயன் இயக்கத்தில் 'நரகாசுரன்', மற்றும் 'சதுரங்க வேட்டை 2', 'வணங்காமுடி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் அரவிந்தசாமி நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அவருடைய அடுத்த படத்தை 'என்னமோ நடக்குது', 'அச்சமின்றி' ஆகிய படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இயக்குனர் ராஜபாண்டி கூறிய கதை அரவிந்தசாமியை வெகுவாக கவர்ந்ததால் இந்த படத்தில் நடிக்க அவர் உடனே ஓகே சொல்லிவிட்டதாகவும் வரும் செப்டம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழு அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.