110 திரையரங்குகளில் 25 நாட்கள்: அருவியின் அருமையான சாதனை

  • IndiaGlitz, [Sunday,January 07 2018]

கடந்த ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஸ்டார்களின் படங்களே எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான சின்ன பட்ஜெட் படமான 'அருவி' மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சாதனை செய்து வருகிறது.

வெகுசிலரை தவிர பெரும்பான்மையானவர்களின் ஆதரவை பெற்ற இந்த படம் இன்று 25வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் இன்னும் பெரிய தியேட்டர்களில் 'அருவி' ஓடிக்கொண்டிருப்பது அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு சான்றாக உள்ளது.

இந்த நிலையில் 'அருவி'யின் 25வது நாள் குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியபோது, 'அருவி - 110 திரையரங்குகளில் 25 நாட்களை கடந்து, மக்கள் அன்புடன் அழகான வெற்றி! கோடி நன்றிகள்!! மக்களுக்கு, படக்குழுவினருக்கு, ஊடகங்களுக்கு, திரைத்துறையினருக்கு!! என்று கூறியுள்ளார்

மேலும் இன்று மாலை திருவண்ணாமலையில் 'அருவி' படக்குழுவினர்களுக்கு தமிழ்நாடு கலை இயக்கிய பெருமன்றம் பாராட்டு விழா நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.