நார்வே தமிழ் திரைப்பட விழா: விருதுகளை அள்ளிய 'அருவி'

  • IndiaGlitz, [Saturday,January 27 2018]

ஒவ்வொரு ஆண்டும் நார்வேயில் தமிழ் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்கள் கெளரவிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் 26 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் விருது பெறும் படங்கள் மற்றும் நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த திரைப்படம் 'அருவி'. இந்த படம் நார்வே தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளை பெறவிருக்கின்றது

சிறந்த நடிகை விருது நாயகி அதிதிபாலனுக்கும், சிறந்த துணை நடிகை விருது அஞ்சலி வரதனுக்கும், சிறந்த எடிட்டர் விருது ரெய்மண்ட் டெர்விக் கிராஸ்டாவுக்கும், சிறந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற அருவி குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்

More News

ஐபிஎல் ஏலத்தில் சில முக்கிய வீரர்களும், அவர்களுக்கான தொகையும்

2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 11வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் இன்று பெங்களூரில் நடந்து வருகிறது. இதில் அஸ்வின், மெக்கல்லம், பிராவோ, உள்பட சில வீரர்களை ஏலம் எடுத்த அணி மற்றும் அவர்களுக்கான தொகை

தமிழில் டுவீட் போட்ட ஹர்பஜன்சிங்

ஐபிஎல் போட்டிகளில் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் இன்று பெங்களூரில் நட்ந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அஸ்வினை மிஸ் செய்தது. அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் அள்ளிக்கொண்டது

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் குறித்து விஜய்சேதுபதி

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்காமல் தியானத்தில் இருந்த விஜயேந்திரர், தேசியகீதம் ஒலிக்கும்போது மட்டும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையாகி வருகிறது.

சென்னையின் முக்கிய பதவிக்கு வருவாரா உதயநிதி?

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி கடந்த சில நாட்களாக அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தைவானில் ஷங்கர் பறக்கவிட்ட 'இந்தியன் 2'

இயக்குனர் ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியாகும் என்று நேற்று ஷங்கர் கூறியுள்ளார்