ஆரம்பமானது 'அருவி' இயக்குனரின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Monday,July 09 2018]

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான 'அருவி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அதிதி பாலன் நடிப்பில் வெளியான இந்த படத்தை கமல், ரஜினி உள்பட் திரையுலக பிரமுகர்கள் அனைவரும் பாராட்டினர். பிலிம்பேர் விருது, நார்வே தமிழ் திரைப்பட விருது உள்பட பல விருதுகளை இந்த படம் அள்ளியது.

இந்த நிலையில் 'அருவி' இயக்குனர் அருண்பிரபு இயக்கும் அடுத்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் பாடல் ஒலிப்பதிவுடன் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் அருண்பிரபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது, 'உள் எழுப்பும் பேரிசை!
ஆனந்தம்! பேரானந்தம்! சின்சினாட்டி வாத்தியக்காரர்களுக்கும் சிட்டுக்குருவி கேரோலினாவிற்கும் கோடி முத்தங்கள்! இசைப்பயணம் இனிதே தொடங்கியது! என்று கூறியுள்ளார். இயக்குனரின் இரண்டாவது படமும் வெற்றியடைய வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 

More News

விஜய்சேதுபதி, த்ரிஷா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தி

முதன்முறையாக விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடிக்கும் திரைப்படம் '96' என்பது தெரிந்ததே. சிறுவயது முதல் முதிர்ச்சி அடைந்த பருவம் வரையிலான காதலை சொல்லும் இந்த படத்தை பிரேம்குமார் என்பவர் இயக்கி வருகிறார்.

உயிரை தியாகம் செய்து சிறுவர்களை மீட்க உதவிய தாய்லாந்து வீரர்

தாய்லாந்து நாட்டில் உள்ள குகை ஒன்றில் சிக்கிய 15 சிறுவர்களை மீட்க அந்நாட்டு கடற்படை, நீச்சல் வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்கார் பட விவகாரம்: விஜய்க்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியாகியது

வாக்கெடுப்பெல்லாம் கிடையாது. இந்த வாரம் வெளியேறுகிறார் யாஷிகா?

பிக்பாஸ் நிகழ்ச்சியை குழந்தைகள், பெண்கள் உள்பட பலகோடி மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றார்கள் என்ற நினைப்பே இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் ஒருசிலர் எல்லை மீறி வருகின்றனர்.

படுக்கையில் என்ன நடந்துச்சு? பொன்னம்பலத்திடம் வாக்குவாதம் செய்யும் ஐஸ்வர்யா

நேற்றை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்போது அனந்துவுக்கு ஒரு நபரை சிறையில் அடைக்க உரிமை கொடுக்கப்பட்டது. அவர் பொன்னம்பலத்தை சிறையில் அடைக்க விரும்புவதாக தெரிவித்தார்.