'அருவி'யின் அபாரமான ஓப்பனிங் வசூல் விபரம்

  • IndiaGlitz, [Monday,December 18 2017]

100 வருட தமிழ் சினிமாவில் குறிஞ்சிப்பூ போன்று அனைவரும் போற்றும் வகையில் ஒரு படம் உருவாகுவது அபூர்வமாகவே காணப்படுகிறது. அந்த வகையில் ஒரு படம் தான் 'அருவி' இதுவரை எந்த ஒரு தனிப்பட்ட நபரோ, ஊடகமோ இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் தரவில்லை என்பதில் இருந்தே இந்த படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை தெரிந்து கொள்ளலாம்

இந்த படத்தை படம் பார்த்தவர்களே சமூக வலைத்தளங்களில் பரப்பிய பாசிட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்தின் மிகப்பெரிய வசூலுக்கு உதவியாக இருந்துள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் எதிர்ப்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது என்பதும் ஹீரோ வேல்யூ இல்லாத ஒரு படத்திற்கு திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் இருந்தது ஆச்சரியப்படத்தக்க ஒரு அம்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது

சென்னையில் இந்த படம் கடந்த வாரயிறுதி நாட்களில் 16 திரையரங்குகளில் 132 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.59,21,528 வசூல் செய்துள்ளது ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்கு இந்த வசூல் மிகப்பெரிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'அருவி' அதிதிபாலனுக்கு ஷங்கர் பாராட்டு

கடந்த வாரம் வெளிவந்த 'அருவி' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஊடகங்களும் விமர்சகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தின் படப்பிடிப்பு முடிந்தது: ரிலீஸ் எப்போது?

விஜய்சேதுபதி, நயன்தாரா முதன்முதலில் இணைந்து நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடித்த படம் 'இமைக்கா நொடிகள்'.

டுவிட்டரில் ஓவியாவின் முக்கிய அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே தற்போது தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் பிசியாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பெற்றவர் ஓவியா

அருவி'யில் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகள் யார் யார் தெரியுமா?

சமீபத்தில் வெளிவந்த 'அருவி' திரைப்படம் ஊடகங்கள், சமூக வலைத்தள பயனாளிகள் மற்றும் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

பெரியபாண்டியனை சுட்டது சக ஆய்வாளர் முனிசேகரா? ராஜஸ்தான் போலீசார் பரபரப்பு தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக கூறப்பட்ட பெரியபாண்டியன் அவர்களின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட நிலையில்